இந்தியாவின் தந்திரோபாயமான நான்கு பொதிகள்! நாளை இலங்கை வரும் சீன வெளிவிவகார அமைச்சர்
திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொகுதிகள் தொடர்பான உடன்படிக்கை நேற்று மாலை கைச்சாத்திடப்பட்ட நிலையில், சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வேங்க் ஹி (Wang Yi)நாளை (08) உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வருகிறார்.
இந்தியாவின் தந்திரோபாயமான நான்கு பொதிகள் மூலம், இலங்கை மீது ஆதிக்கத்தை செலுத்தும் வகையிலான நடவடிக்கையாக திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொகுதிகள் தொடர்பான உடன்படிக்கை அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலைமையை எதிர்கொள்ளும் நோக்கில் சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார்.
எது எப்படி இருந்த போதிலும் இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 65 வது ஆண்டு பூர்த்தியாவதை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்துக்கொள்ள சீன அமைச்சர், இலங்கை வருவதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்திருந்தது.
இதனிடையே இலங்கைக்கான சீனத் தூதுவர் கடந்த மாதம் யாழ்ப்பாணம் உட்பட வடபகுதிக்கு விஜயம் செய்ததுடன் வட பகுதி மக்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் பல திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.