கப்பல் வருகைக்காக விழா எடுக்கப்போகும் சீன தூதரகம்
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன யுவான் வாங் 5 விஞ்ஞான ஆராய்ச்சிக் கப்பலின் வருகையை முன்னிட்டு, வரவேற்பு விழாவை இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இலங்கையில் உள்ள சீன தூதரகம் இந்த நிகழ்வை எளிமையான முறையில் நடத்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே இந்த கப்பல், கடந்த 11ம் திகதி அம்பாந்தோட்டை சீனக் கட்டுப்பாட்டு துறைமுகத்துக்குள் செல்லவிருந்தபோதும், இந்தியா மற்றும் அமெரிக்காவின் அதிருப்தியினால், தாமதப்படுத்தப்பட்டது.
இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் செல்லும் கப்பல்

எனினும் இன்று கப்பல் துறைமுகத்துக்குள் செல்கிறது.
அந்த கப்பலை ஆகஸ்ட் 22 வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் இராஜதந்திர வழிகள் மூலம் அரசாங்க உயர் மட்டம் நடத்திய விரிவான ஆலோசனையின் பின்னர் இந்த கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
| கப்பலை அனுமதிக்க இலங்கையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் விபரங்களை வெளியிட மறுத்துள்ள சீனா! |
| இந்தியாவும் இலங்கையும் நாணயம் ஒன்றின் இரண்டு பக்கங்கள்: ஒன்றிணைந்து முன்னேற ரணில் அழைப்பு |
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri