கப்பலை அனுமதிக்க இலங்கையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் விபரங்களை வெளியிட மறுத்துள்ள சீனா!
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட, தனது செயற்கைக்கோள் ஏவுகணை கண்காணிப்பு கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள சீனா, இடையில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக இலங்கையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் விபரங்களை வெளியிடவில்லை.
இலங்கை யுவான் வாங்-5 க்கு அதன் துறைமுகத்தில் நிறுத்த அனுமதி அளித்துள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் இன்று சீனாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
விபரங்களை வெளியிட மறுத்துள்ள சீனா
எனினும் இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடப்பட்ட விடயங்களை அவர் வெளியிடவில்லை.
கடந்த 11ஆம் திகதியன்று துறைமுகத்துக்கு வரவிருந்த இந்த கப்பல், இந்தியா மற்றும் அமெரிக்காவால் தெரிவிக்கப்பட்ட கவலைகளைத் தொடர்ந்து பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கத்தினால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதன் பின்னரே கொழும்புக்கும் பீய்ஜிங்குக்கும் இடையில், பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது.
இலங்கையின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டே சீனா
இதன்போது இலங்கையின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டே சீனா தமது கப்பலை, துறைமுகத்துக்குள் கொண்டு செல்ல உடன்பட்டதாக இலங்கை அரசாங்கத்தரப்பு தெரிவித்திருந்தது.
எனினும் இந்த விடயம் தொடர்பில் சீனாவின் பேச்சாளர், ஊடகவியலாளர் சந்திப்பின்போது மௌனம் காத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எல்லை மீறிச் சென்ற பிரித்தானிய விமானம் - விரட்டி அடித்த ரஷ்ய போர் விமானம் |