சேதனப்பசளைகளை நான்காவது தடவையாக சோதனையிட சீனத் தூதரகம் அறிவுறுத்தல்
சீவின் பயோடெக் ஸ்பிரிட் நிறுவனத்தின், சேதனப்பசளைகளை நான்காவது தடவையாகவும் சோதனைகளை மேற்கொள்ளுமாறு இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீவின் பயோடெக் ஸ்பிரிட் நிறுவனத்தின், சேதனப்பசளைகளை ஏற்றி வந்த கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வெளியில் தரித்து நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கொமர்ஷல் பேர்ட்டிலைசா்ஸ் நிறுவனத்தின் தகவல்களின் படி, இந்த கப்பல், கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்கப்படவில்லை.
குறித்த சீன நிறுவனத்தின் சேதனப்பசளையில் பக்ரீயா இருப்பதாக கூறி, இலங்கை அதிகாரிகள் அதனை நிராகரித்திருந்தனர்.
மூன்று முறை மேற்கொள்ளப்பட்ட சோதைனையில் இந்த தொற்று கண்டறியப்பட்டதாக இலங்கையின் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
எனினும் நான்காவது தடவையாகவும் சோதனைகளை மேற்கொள்ளுமாறும் அது உள்ளுார் மற்றும் சீனாவின் நிபுணர்கள் மத்தியில் இடம்பெறவேண்டும் என்றும் இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சர்ச்சைகள் தொடர்பில் சீனாவின் தூதரகத்துக்கு நேற்று இலங்கையின் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri