உலக சந்தையில் சீன மின்சார வாகனங்களின் ஆதிக்கம்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடுமையான வரிக் கட்டுப்பாடுகளையும் மீறி, கடந்த ஏப்ரல் மாதத்தில் சீனாவின் மின்சார வாகனங்களின் (EV) ஏற்றுமதி 40 வீதம் உயர்ந்து உலக சந்தையில் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
புளூம்பெர்க் தரவுகளின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் சீனா 2,78,081 மின்சார வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
இதன் மூலம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை மொத்தம் 8,93,852 வாகனங்களை சீனா வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
மின்சார வாகனங்கள்
பிராந்திய அடிப்படையில் சீன மின்சார வாகனங்களை ஆசிய நாடுகள் அதிகபட்சமாக 1,10,613 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளன.
இதற்கு அடுத்தபடியாக ஐரோப்பா 83,813 வாகனங்களையும், லத்தீன் அமெரிக்கா 52,897 வாகனங்களையும் இறக்குமதி செய்துள்ளன.

சீனாவிடமிருந்து வாகனங்களை இறக்குமதி செய்யும் முதல் 10 நாடுகளில் பிரேசில் மிக அதிகபட்சமாக 221 வீதம் வளர்ச்சியைப் பதிவு செய்து 38,144 வாகனங்களை வாங்கியுள்ளது.
இது தவிர தென்கொரியா, ஜெர்மனி மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் சீன மின்சார வாகனங்களுக்கான தேவை 100 முதல் 190 விழுக்காடு வரை கணிசமாக உயர்ந்துள்ளது.
தடை
சீன மின்சார வாகனங்களின் இந்த அசுர வளர்ச்சி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள கடுமையான தடைகளுக்கு மத்தியிலும் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா சீன மின்சார வாகனங்களுக்கு 100 வீதம் வரியை விதித்துள்ளதோடு, அவற்றில் பயன்படுத்தப்படும் சில சீன மென்பொருட்களுக்கும் தடை விதித்துள்ளது.
அதேபோல், ஐரோப்பிய ஒன்றியமும் சீன வாகனங்களுக்கு 35.3 வீதம் வரை வரி விதித்துள்ளது.
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan