சீனாவின் முன்னணி நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதில் ஆர்வம்
சீனாவின் முன்னணி நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் சீனாவின் வர்த்தகரக்ள் தூதுக்குழுவொன்றுக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இலங்கையில் முதலீடு செய்வதற்கான விருப்பத்தை சீனாவின் முன்னணி வர்த்தகர்கள் வெளிப்படுத்தி இருப்பதாக பிரதமர் அலுவலக ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் உறுதி

சீன வர்த்தகர்கள் இலங்கையின் சக்தி மூலங்கள், மின்சக்தி, எரிவாயு போன்ற துறைகளில் முதலீடு செய்வதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அரசாங்கத்தின் சார்பில் அவர்களுக்குத் தேவையான அத்தனை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று பிரதமர் அதன்போது சீன வர்த்தகர்களுக்கு உறுதியளித்துள்ளதாகவும் செய்திக்குறிப்பில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri