இலங்கை உட்பட மூன்று நாடுகளுடன் ஆலோசனை நடத்திய சீன இராணுவக் குழு
பாதுகாப்பு விவகாரங்களில் மேலும் ஒத்துழைப்பது குறித்து ஆலோசிக்க சீன இராணுவக் குழு ஒன்று அண்மையில், மாலைதீவு, இலங்கை மற்றும் நேபாளத்துக்குச் சென்றதாக சீன அரசாங்கத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
சீனா, தெற்காசியாவில் அதன் மூலோபாயப் போட்டியாளரான இந்தியாவின் செல்வாக்கை எதிர்கொள்வதற்கான உந்துதலில் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்க முயல்கிறது.
இந்நிலையில், கடந்த வாரம், மாலைத்தீவுகள், சீனாவுடன் ஒரு "இராணுவ உதவி" ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
சீன இராணுவத்தின் அறிக்கை
அதனையடுத்து, மார்ச் 4 முதல் 13 வரை இலங்கை சீனா மற்றும் நேபாளத்துக்கு மேற்கொள்ளப்பட்ட பயணத்தின்போது சீன இராணுவத்தூதுக்குழு மாலைத்தீவில் சீன சார்பு ஜனாதிபதி மொஹமட் முய்சுவை சந்தித்துள்ளது.
குறித்த மூன்று நாடுகளிலும், "இராணுவ உறவுகள் மற்றும் பொதுவான அக்கறையின் பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றிய கருத்துக்களை சீனக்குழுவினர் பரிமாறிக் கொண்டனர்" என்று சீன இராணுவம் அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேவேளை, சீனா நேபாளத்துடனும் நெருங்கிய உறவுகளை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam
