சீன அபிவிருத்தித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை! சீனத் தூதுவர் குற்றச்சாட்டு
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சீனா முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு 'தேவையற்ற வெளி அழுத்தங்கள்' முட்டுக்கட்டை போடுவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஜென்ஹாங் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் சர்வதேச ஊடகமொன்றுக்கு அவர் விசேட நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.
பிராந்திய மிரட்டல் நடவடிக்கைகள்
இதன்போது, அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது,
இந்தப் பிராந்தியத்தில் சீன முதலீடுகளைத் தடுக்கும் 'பிராந்திய மிரட்டல்' நடவடிக்கைகளைத் சீனா வன்மையாக எதிர்க்கின்றது.

அவ்வாறான முட்டுக்கட்டைகள் காரணமாகவே 2019ஆம் ஆண்டு யாழ்ப்பாணத் தீவுகளில் சீன அரசாங்கம் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்ட மின்சாரத் திட்டம் நிறுத்தப்பட்டது.
அதன் காரணமாக சுமார் பத்தாயிரம் உள்ளூர் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
அதே போன்று இன்னும் பல முக்கியமான அபிவிருத்தித் திட்டங்களும் பிராந்திய மிரட்டல் ஊடாக முட்டுக்கட்டை போடப்பட்டு தடுக்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.