இலங்கைக்கு வழங்கிய கடன் தொடர்பில் சீனா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சீனா இலங்கைக்கு வழங்கிய கடனை மீள செலுத்துவதற்கு இரண்டு வருட காலவகாசத்தை சீனா வழங்கியுள்ளது.
சீன இறக்குமதி – ஏற்றுமதி வங்கியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு கடனை மீள செலுத்தாதிருப்பதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்கான ஆதரவை வழங்வுள்ளதாகவும் அந்த வங்கி அறிவித்துள்ளது.
ஏழு தசாப்தங்களில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் 22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கைக்கு பிராந்திய போட்டியாளர்களான சீனாவும் இந்தியாவும் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குபவர்களாகும்.
கடிதத்தின்படி, இலங்கையின் கோரிக்கையின் அடிப்படையில் உடனடி தற்செயல் நடவடிக்கையாக 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் செலுத்த வேண்டிய கடன் சேவையை நீட்டிக்கப் போவதாக சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி தெரிவித்துள்ளது.