கமேனி மீதான தாக்குதல் இரண்டரை மணி நேரத்துக்கு முன்னரே எச்சரித்திருந்த சீனா!
இன்று அமெரிக்க இஸ்ரேல் விமானங்கள் நினைத்தால் ஈரானின் எந்த இடத்திற்கும் பறந்து சென்று அந்த இலக்குகள் மீது நிதானமாக தாக்குதல்களை மேற்கொண்டு விட்டு சாதாரணமாக திரும்ப முடியும்.
இந்தநிலையில், இஸ்ரேலிய விமானங்கள் நேற்று மாத்திரம் இரண்டு தடவைகள் ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மீது தாக்குதலை நடாத்தியிருந்தது.
கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் ஈரானின் 100-இற்கும் அதிகமான இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்காவின் மத்திய கட்டளை மையம் கூறியுள்ளது.
இஸ்ரேலில் இருந்து யுத்த விமானங்கள் புறப்படுகின்ற அந்த நேரத்திலேயே குறித்த தகவல்களை ஈரான் பெற்று விடக் கூடிய அளவிலான தொழில்நுட்பத்தை சீனா ஏற்கனவே வழங்கியிருந்தது.
ஈரானை நோக்கி வருகின்ற எதிரிகளின் விமானங்களை அவைகள் ஈரானை நெருங்குவதற்கு 600 மைல்களுக்கு முன்னதாகவே கண்டறியக்கூடிய அதி சக்திவாய்ந்த இரத்திரனியல் ராடர்களை எல்லாம் சீனா ஏற்கனவே ஈரானுக்கு வழங்கி விட்டிருந்தது.
அப்படியிருந்தும் ஈரானினால் தனது தலைவர்கள் கொல்லப்படுவதற்காக வந்த விமானங்களை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...