மத்திய கிழக்கு பதற்றம்: 54 விமான சேவைகள் இரத்து!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை மற்றும் வான்பரப்புகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதன் காரணமாக, இன்று(01.03.2026) அங்கு இயக்கப்படவிருந்த 12 விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இரத்துச் செய்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய வான்பரப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி
- கொழும்பு - டுபாய்: UL 231 / UL 225
- டுபாய் - கொழும்பு: UL 232 / UL 226
- கொழும்பு - தோஹா: UL 217
- தோஹா - கொழும்பு: UL 218
- கொழும்பு - டம்மாம்: UL 253
- டம்மாம் - கொழும்பு: UL 254
- கொழும்பு - ரியாத்: UL 265
- ரியாத் - கொழும்பு: UL 266
- கொழும்பு - குவைத்: UL 229
- குவைத் - கொழும்பு: UL 230
இதேவேளை, மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதுடன், மேலதிக தகவல்களுக்கு அந்தந்த பயண முகவர்கள் அல்லது விமான நிறுவனத்தின் இணையத்தளத்தைத் தொடர்புகொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
அதே போன்று, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையைக் கருத்திற்கொண்டு, இன்று (01.03.2026 ) நண்பகல் 12.00 மணி வரை திட்டமிடப்பட்டிருந்த உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் 54 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன்படி வருகை தரவிருந்த 26 விமானங்களும், புறப்படவிருந்த 28 விமானங்களும் இதில் அடங்கும். மத்திய கிழக்கு நாடுகளுக்கு அல்லது அந்நாடுகள் ஊடாக ஏனைய நாடுகளுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகள், விமான நிலையத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தத்தமது விமான நிறுவனங்களைத் (Airlines) தொடர்பு கொண்டு பயணங்கள் தொடர்பான புதிய தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஐரோப்பா, தூர கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான விமான சேவைகள் வழமை போல் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்படுகின்றன.
மேலதிக தகவல் - அமல்
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam