இலங்கை முழுவதும் பாடசாலை மாணவர்களுக்கு சீனா சீருடைத் துணி
இலங்கை முழுவதும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு சீன நாட்டிலிருந்து சீருடை துணி வழங்கப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று(10.11.2024) மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அபிவிருத்தி செயற்பாடு
“இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு சீனா பல வழிகளிலும் உதவி செய்து வருகிறது.
அந்த வகையில் இலங்கை முழுவதும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் வருடம் 2025 ஆம் ஆண்டு சீருடை துணி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
மேலும், இந்திய அத்து மீறிய கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகள் நிறுத்தப்படும்
இந்திய கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளினால் வடக்கு கடலும் மக்களும் பாதிக்கப்படும் நிலையில் அவற்றை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வடக்கு கடற் பகுதி மக்கள் இந்திய அத்துமீறிய கடற்றொழிலாளர்களின் வருகையால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களின் நிலை குறித்து நான் அறியும் நிலையில் தொடர்ச்சியாக எமது கடல் வளத்தையும் மக்களையும் அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் இந்திய அத்துமீறிய கடற்றொழிலாளர்களை அனுமதிக்க முடியாது’’ என்றார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
