100 நவீன சொகுசு மின்சார பேருந்து வழங்க சீனா நடவடிக்கை: சீனத் தூதுவர் தெரிவிப்பு
இலங்கைக்கு 100 நவீன சொகுசு மின்சார பேருந்துகளை விரைவாக வழங்குவதற்கு சீனா நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஷென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார்.
மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் ஆகியோரை இன்று (22.01.2026) சந்தித்து ஆசி பெற்ற போதே சீனத் தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
100 நவீன சொகுசு மின்சார பேருந்து
எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாரிய சுற்றுச்சூழல் மாசடைவைக் குறைக்கும் நோக்கில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வழங்கப்படத் திட்டமிடப்பட்டுள்ள ஒரு பேருந்தின் விலை சுமார் 2,25,000 அமெரிக்க டொலர்கள் என்றும் சீனத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri
அம்மாவான பின்னும் குறையாத இளமை... sleeveless ஜாக்கெட்டுடன் ரசிகர்களை கிறங்கடிக்கும் VJ அஞ்சனா! Manithan
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam