சீன-இலங்கை நீர் தொழில்நுட்பத்திற்கான கூட்டு ஆராய்ச்சி
நீர் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு மற்றும் புத்தாக்கத்தின் புதிய சகாப்தத்தை முன்னறிவிக்கும் சீன-இலங்கை நீர் தொழில்நுட்பத்திற்கான கூட்டு ஆராய்ச்சி மற்றும் செயல்விளக்க மையம் (JRDC), பேராதனை பல்கலைக்கழகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
சீன அறிவியல் கல்லூரியின் பிரதித் தலைவர் யாப்பிங் சாங் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டி.எம். லமாஹேவா உட்பட்டவர்களின் பங்கேற்புடன் இந்த மையம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த அதிநவீன நிறுவனம் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நீர் ஆராய்ச்சி நிலையமாக விளங்குகிறது.
வலுவான இருதரப்பு உறவு
அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் குடிநீரில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கண்டறியும் நோக்கில், இங்கு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. நாட்பட்ட சிறுநீரக நோய், இலங்கையில் குறிப்பாக விவசாய பிரதேசங்களில் ஒரு அழுத்தமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இந்தநிலையில் புதிய ஜே.ஆர்.டி.சி.யின் மேம்பட்ட திறன்கள், இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் நம்பிக்கையை வழங்குகிறது.
இந்த மையம், நீர்வழி நோய்களுக்கு பங்களிக்கும் காரணிகளைக் கண்டறிந்து குறைப்பதில் கவனம் செலுத்துகிறது. சீன மக்கள் குடியரசின் பரிசு, JRDC சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை எடுத்துக்காட்டுகிறது.
ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு, நீர் தொழில்நுட்பத்தில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் கல்வி வழங்குவதை இந்த மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |