இந்தியாவை சீண்டுவதற்கு சீனா இலங்கையை பாவிக்கக்கூடாது! - சுரேஷ் காட்டமான அறிக்கை

Srilanka India China Tamil People
By Rakesh Dec 23, 2021 01:39 PM GMT
Report

இந்தியாவுக்கு எதிராக வடக்கு மாகாண மண்ணை சீனா போன்ற நாடுகள் பாவிப்பதற்கு எந்தவிதத்திலும் அனுமதி அளிக்க முடியாது." என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் அண்மையில் வடக்கு மாகாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டு யாழ். கடற்பகுதிகளையும், மன்னார் சென்று இராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள எட்டாவது மணல் திட்டையும் பார்வையிட்டுள்ளார்.

சீனத் தூதுவரின் இந்த விஜயம் குறித்து சுரேஷ் க.பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

"தமிழ் மக்கள் அல்லலுறும் போதும் நியாயத்துக்காகப் போராடிய போதும் உதவ முன்வராத சீனா இப்போது கரிசனை காட்டுவதுபோல் நடிப்பது பலத்த சந்தேகங்களை எழுப்புகின்றது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"உலகத்தின் பொலிஸ்காரனாகத் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் சீனா முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. அதற்காக ஒரே பாதை ஒரே பட்டி, பட்டுப்பாதை போன்ற திட்டங்களை மிகப் பெரும் முதலீட்டில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

தென்சீனக் கடற்பகுதியில் இருக்கும் மண் திட்டுக்களைத் தனது இராணுவ, விமானப்படைத் தளங்களாகவும் மாற்றி வருகின்றது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளுடன் முரண்பாடுகளையும் ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

அதைப்போலவே இந்து சமுத்திர பிராந்தியத்தில் தனது வல்லாதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும் ஒரே பாதை, ஒரேபட்டி திட்டத்தை நடைமுறைப்படுத்திக் கொள்ளவும் இந்து சமுத்திர பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையையும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது.

இலங்கையில் தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் நாங்கள் சீனாவுடன் பேசியபோது, "நாங்கள் நாடுகளுக்கிடையிலான உறவுகளை வைத்துக்கொள்வோமே தவிர, உள்நாட்டு விவகாரங்களில் தலையிட மாட்டோம்" என்று கூறினார்கள்.

அது மாத்திரமல்லாமல், தமிழ் மக்கள் யுத்த குற்றங்களுக்கும் இனப் படுகொலைக்கும் எதிராக உலக நாடுகளிடம் நீதி கேட்டு சர்வதேச மன்றங்களை அணுகியபோது, அங்கும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் அவர்களது கோரிக்கைகளுக்கு எதிராகவும் செயற்பட்டு இலங்கை அரசைக் காப்பாற்றி வந்தார்கள்.

இப்போது, தமிழ் மக்கள் மேல் பரிவு கொண்டவர்கள் போல் நடித்து, மீனவர்களுக்கு உதவி செய்கின்ற போர்வையில், ஒரு தொகுதி வலைகளையும் உலர் உணவுகளையும் கொடுத்த நாடகத்தையும் நாங்கள் அண்மையில் பார்த்தோம். வடக்கு மாகாணத்தில் அவர்களது பிரசன்னம் என்பது இந்தியாவைச் சீண்டுவதைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம்.

போர்க்காலத்தில் மிக அதிகளவிலான இராணுவ தளபாடங்களையும் விமானங்களையும் கொடுத்து இலங்கையைத் தனது பெருங்கடன்கார நாடாக்கிய பெருமை சீனாவையே சாரும். அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம் போன்றவற்றை நிர்மாணிப்பதற்கு அதிக அளவு முதலீடுகளைச் செய்து, தானே முன்னின்று கட்டுமானப் பணிகளையும் சீனா மேற்கொண்டது.

வர்த்தக ரீதியில் எத்தகைய இலாபமுமற்ற இந்த முதலீடுகளால் இலங்கையை மேலும் மேலும் கடனாளியாக்கிவிட்டு, சீனா அத்துறைமுகத்தைத் தனதாக்கிக்கொண்டுள்ளது. இதனைப் போலவே மத்தள விமான நிலையம், கொழும்பு துறைமுக நகரம், கொழும்பு துறைமுகம் போன்றவற்றில் செய்யப்பட்ட முதலீடுகளினாலும் சீனாவே அதிகளவில் பயனடைகின்றது.

இவ்வாறு இலங்கைக்குப் பல பில்லியன் ரூபாக்களைக் கடனாகக் கொடுத்து அதைக் கடனாளியாக்கிவிட்டு முழு இலங்கையையுமே கபளீகரம் செய்யும் நடவடிக்கைகளில் சீனா இறங்கியிருக்கின்றது. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான சீனத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். சீன உணவகங்கள், வர்த்தக நிலையங்கள் போன்றவை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தன்னை இறைமை மிக்க நாடு என்று கூறிக்கொள்ளும் இலங்கை, இப்படி சீனாவின் சகல நடவடிக்கைகளுக்கும் முகம் சுழிக்காமல் ஆதரவு தெரிவித்து வருகின்றது.

இத்துடன் நிற்காமல், வடக்கு மாகாணத்தைத் தனது டிராகன் பிடிக்குள் கொண்டுவரும் நோக்குடன், நயினாதீவு, அனலைதீவு, நெடுந்தீவு போன்ற இடங்களில் மாற்று மின்சக்தி நிலையங்களை உருவாக்குவதற்கும் சீனா ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.

இத்துடன் கடல்சார் துறைகளிலும் தனது நாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய ஊக்குவிக்கின்றது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் என்பது இந்தியாவுக்குக் கூப்பிடு தொலைவிலுள்ள ஒரு பிரதேசம். இங்கு சீனர்களின் பிரசன்னம் என்பதோ, முதலீடுகள் என்பதோ இந்தியாவின் பாதுகாப்புக்குக் குந்தகங்களை ஏற்படுத்தும் என்பது சாதாரண ஓர் அரசியல் மாணவனும் புரிந்துகொள்ளக்கூடிய விடயம்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், வடக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்படும் முதலீடுகளுக்கு இலங்கை சீனாவுக்கு இடமளிப்பதென்பது அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. கலாச்சார ரீதியாக, மொழி ரீதியாக, சமய ரீதியாகப் பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்புடையவர்கள் இலங்கை, இந்திய மக்கள், குறிப்பாக எமக்கு மிகவும் அண்மித்த பிரதேசமான தமிழகத்தில் எட்டு கோடி தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.

ஆகவே, இந்தியாவுக்கு எதிராக வடக்கு மாகாண மண்ணை சீனா போன்ற நாடுகள் பாவிப்பதற்கு எந்தவிதத்திலும் அனுமதி அளிக்க முடியாது. சீனாவின் இத்தகைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால், வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்யக்கூடிய வகையிலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையிலும் உற்பத்தி சார் தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு இந்தியா முதலீடுகளையும் வழிகாட்டுதல்களையும் மேற்கொள்ள வேண்டும்.

அதுமாத்திரமல்லாமல், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குத் தேவையான மின்சாரம், குடிதண்ணீர், வடிகால் அமைப்பு போன்ற விடயங்களில் தன்னிறைவடைவதற்கும் இந்தியா உதவ முன்வரவேண்டும்.

பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள சீனாவை இலங்கைக்குள் உள்நுழைய விட்டு எதிர்காலத்தில் தேவையற்ற சச்சரவுகளை அண்டை நாடுகளுடன் ஏற்படுத்திக்கொள்ளாமல், இலங்கையில் ஏற்படுகின்ற எத்தகைய அனர்த்தங்களிலும் உடனடியாக உதவுகின்ற, எமக்கு அருகில் உள்ள விஞ்ஞான தொழினுட்ப மற்றும் அறிவுசார் துறைகளில் பாண்டித்தியம் பெற்ற இந்தியாவுடன் உறவுகளை மேம்படுத்திக்கொள்வதே இந்த நாட்டின் நலன்களுக்குச் சிறப்பானதாகும் என்பதையும் இலங்கை அரசுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

உலக நாடுகளின் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைகளை நிராகரித்துக்கொண்டு, தனது நாட்டில் வாழுகின்ற இஸ்லாமியச் சமூகத்தினரின் மனித உரிமைகள் அனைத்தும் மறுதலிக்கப்பட்டு அடிமைகளைவிடவும் கேவலமாக நடத்திக்கொண்டும் வறுமைப்பட்ட நாடுகளைக் கடனாளிகளாக்கி தமது கைப்பிடிக்குள் கொண்டுவரும் கேவலமான கொள்கையையும் கைவிட்டு அதன் பிறகு ஏனைய நாட்டு மக்கள் மீது அக்கறை செலுத்துவது குறித்து சீனா சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US