சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சீன கப்பல் வருகை விவகாரம்! இலங்கை சீனாவிடம் விடுத்துள்ள கோரிக்கை
சீனாவின் விண்வெளி கண்காணிப்பு கப்பலின் வருகையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இலங்கை சீனாவிடம் முக்கிய கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.
அதன்படி குறித்த கப்பலின் ஹம்பாந்தோட்டை வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை, சீனாவிடம் கோரியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
சீன அரசாங்கத்திடம் கோரிக்கை
குறித்த செய்தியின் படி, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் மேலும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான விண்வெளி - செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கம் சீன அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன கப்பல் எதிர்வரும் ஆகஸ்ட் 11ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து ஆகஸ்ட் 17ஆம் திகதி புறப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த கப்பலின் வருகை தொடர்பில் பல தரப்பினராலும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த கப்பல் எரிபொருள் நிரப்புதலுக்காகவே ஹம்பாந்தோட்டைக்கு வருவதாக இலங்கை அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.
| சீன ஆராய்ச்சிக் கப்பலின் நோக்கம் இதுவே! வெளிப்படுத்திய அமைச்சர் பந்துல |
இந்த சூழலிலேயே இலங்கை சீனாவிடம் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

எழுத்துப்பூர்வ கோரிக்கை
அத்துடன் இலங்கை வெளியுறவு அமைச்சகம் சீனாவின் கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கான அனுமதியை ஒத்திவைக்கும் கோரிக்கையை முறையான இராஜதந்திர வழிகள் மூலம் சீன வெளியுறவு அமைச்சகத்தின் சக அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக அனுப்பியுள்ளதாக தெரியவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri