சேதன உரம் குறித்த சீனாவின் கருத்து நிராகரிப்பு
சேதன உரம் குறித்து சீனாவின் நிலைப்பாட்டை நிராகரிப்பதாக தாவர தனிமைப்படுத்தல் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீன நிறுவனமொன்றிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதன உரம் தரமற்றது எனவும், அதில் ஆபத்தான பக்ரிரீயாக்கள் காணப்படுவதாகவும் இலங்கை ஆய்வு நிறுவனம் தெரிவித்திருந்தது.
எனினும், இந்த ஆய்வு விஞ்ஞானபூர்வமானதல்ல எனவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவித்திருந்தது.
சர்வதேச நியமங்களின் பிரகாரம் உரவகை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது என பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தேவிகா டி கொஸ்தா (Devika de Costa) தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் தேவிகா, பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞான பீடத்தின் தவாரப் பாதுகாப்பு தொடர்பான பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று நாட்கள் உரிய முறையில் இந்த சேதன உரம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என பேராசிரியர் கொஸ்தா தெரிவித்துள்ளார்.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri