கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனையத்திற்கு எதிரான போராட்டத்தின் பின்புலத்தில் சீனாவின் புலனாய்வு பிரிவு
கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனையத்திற்கு எதிரான போராட்டங்களுக்குப் பின்புலத்தில் சீனாவின் புலனாய்வு பிரிவு இருப்பதாகப் புதுடில்லி கவலை கொண்டுள்ளது என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கரின் கொழும்பு வருகை புதுடில்லியின் கவலைகளால் தூண்டப்பட்ட ஒன்று என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சரின் வருகை ஐந்து நாட்களுக்கு முன்னர் தீர்மானிக்கப்பட்ட திகதியிலேயே இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய முதலீட்டில் இந்திய அரசாங்கத்தின் பங்கு இல்லாதபோதும் அதில் தனியார்த்துறை முதலீடு அவசியம் என்பது இந்தியாவின் நிலைப்பாடாக ஜெய்சங்கரால் இலங்கை அரசாங்கத்துக்குக் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் இந்தியாவின் முதலீட்டை எதிர்ப்பது மற்றும் திருகோணமலையில் எரிபொருள் குதங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ஊக்குவிப்பது என்ற விடயங்களில் சீனா பின்னால் இருந்து செயற்படுவதாக இந்தியா கருதுகிறது என்ற ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam