வரலாறு காணாதளவு வெள்ளத்தில் சிக்கிய சீனாவின் முக்கிய நகரங்கள்
சீனாவில்(China) பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 47 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெற்கு சீனாவின் Guangdong மாகாணத்தில் கனமழை பெய்ததால், வரலாறு காணாத வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விளைநிலங்கள்
குறித்த அனர்த்தத்தில் Pingyuan கவுண்டியில் உள்ள 8 நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, நூற்றுக்கும் மேற்பட்ட பாலங்கள் மற்றும் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் Meizhou நகரின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட மாவட்டம் ஒன்றில் 38 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
மேலும், Meizhouவின் வேறு இடங்களில் 9 பேர் பலியானதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |