இலங்கையில் இராணுவ தளங்களை அமைக்க சீனா ரகசிய திட்டம்
இலங்கை உட்பட பல நாடுகளில் இராணுவ தளங்களை நிறுவ சீனா ஆய்வு செய்து வருவதாக அமெரிக்காவின் உளவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்காவில் உள்ள ஜிபூட்டி மற்றும் கம்போடியாவில் உள்ள ரீம் கடற்படைத் தளத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் சீனா ஈடுபட்டுள்ளது.
அதேவேளை மியான்மர், கியூபா, கினியா, பாகிஸ்தான் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளில் இராணுவ தளங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை சீனா ஆராய்ந்து வருகிறது.
புலனாய்வு பிரிவு
தற்போதுள்ள சர்வதேச சட்ட முறைமைக்கு சவால் விடும் வகையில் சீனா, ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தயாராகி வருவதாக அந்த அமெரிக்காவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு பிரிவு வெளியிட்ட 2024 ஆண்டு அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.