சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை அதிகரிப்பு
சீனாவின் வடமேற்கு பகுதியில் 6.2 ரிக்டரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 127பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வீடுகளில் விரிசல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்ட காரணத்தினால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொல்ல முயற்சித்த அவரது மெய்ப்பாதுகாப்பாளர்: கடற்புலிகள் தாக்குதல் தளபதி கூறும் அதிர்ச்சித் தகவல் (Video)
மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் தடை
மேலும் இந்த அனர்த்தத்தில் 220 பேர் காயமடைந்துள்ளதுடன்,கிங்காய் மாகாணத்தில் சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது.
இதன் காரணமாக சில கிராமங்களில் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதுடன், மீட்பு பணிகள் இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |