இலங்கைக்கு மேலும் 16 லட்சம் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கும் சீனா
சீன அரசாங்கம் இலங்கைக்கு மேலும் 16 லட்சம் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்குகின்றது.
ஒரே தடவையில் இலங்கைக்கு நன்கொடையாக கிடைக்கும் அதி கூடிய கொவிட் தடுப்பூசி தொகுதி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
நன்கொடையாக கிடைக்கப் பெறும் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளைய தினம் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு விமானங்களில் இந்த தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு தேiவாயன சிரின்ஜர்கள் 16 லட்சத்தையும் சீனா நன்கொடையாக வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக இலங்கைக்கு சீன அரசாங்கம் பதினொரு லட்சம் தடுப்பூசிகளை இரண்டு தடவையாக நன்கொடையளித்திருந்தது.
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri