சீனாவின் கடன்பொறிக்குள் சிக்கிய 75 நாடுகள்
உலகில் மிக மோசமான பொருளாதார நிலையில் இருக்கும் 75 நாடுகள் சீனாவிடம் இருந்து வாங்கிய கடனை இந்த ஆண்டு திருப்பிச் செலுத்தும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியான அறிக்கையின் அடிப்படையில், இந்த 75 நாடுகளும் மொத்தமாக 22 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை சீனாவிற்கு இந்த ஆண்டு திருப்பிச் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி ஜின்பிங்கின் கனவுத் திட்டம்
இந்த நாடுகள் மொத்தமாக 35 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை சீனாவிடம் இருந்து இதுவரை கடனாகப் பெற்றுள்ளதாகவே தெரிய வந்துள்ளது.
இந்தக் கடன்கள் அனைத்தும் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் கனவுத் திட்டமான பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் அடுத்த பத்தாண்டுகளுக்கு ஏற்கனவே அளித்துள்ள கடனைத் திருப்பி வாங்கும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபடும் என்றே கூறுகின்றனர்.
சீனாவிற்கு பெருந்தொகையை திருப்பிச் செலுத்த வேண்டிய அழுத்தம் காரணமாக சுகாதாரம் மற்றும் கல்விக்கான உள்ளூர் நிதியுதவியை குறைக்கும் நிலை பல நாடுகளுக்கும் ஏற்பட இருக்கிறது.
சீனாவின் சூழ்ச்சி
2016ல் மட்டும் இந்த திட்டத்திற்கு என சீனா 50 பில்லியன் டொலர் தொகைக்கும் அதிகமாக கடனாக அளித்துள்ளது.
ஆனால், ஏழை நாடுகளுக்கு கடன் அளித்து அந்த நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டில் சிக்கவைக்கும் சீனாவின் சூழ்ச்சி இதுவென குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், சீனா அதை புறந்தள்ளியுள்ளது.
மட்டுமின்றி, கடன் வாங்கிய நாடுகளும் சீனாவிற்கு எதிராக கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.
மேலும், புதிதாக சில நாடுகளுக்கும் சீனா பெருமளவு கடன் அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
385 பில்லியன் அமெரிக்க டொலர்
தைவானில் இருந்து சீனாவிற்கு தங்கள் தூதரக உறவை மாற்றிய 18 மாதங்களுக்குள் ஹோண்டுராஸ், நிகரகுவா, சாலமன் தீவுகள், புர்கினா பாசோ மற்றும் டொமினிகன் குடியரசு ஆகிய நாடுகளுக்கு கடனுதவி அளித்துள்ளது.
மட்டுமின்றி, பாகிஸ்தான், கஜகஸ்தான், லாவோஸ் மற்றும் மங்கோலியா, அத்துடன் அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா போன்ற முக்கியமான கனிமங்கள் மற்றும் உலோகங்களை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கும் சீனா தொடர்ந்து கடன் அளித்து வருகிறது.
2021ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் சீனா இதுவரை பல நாடுகளுக்கும் 385 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை கடனாக அளித்துள்ளது என்றே கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
