இலங்கை அரச ஊடகத்துடன் சீனா மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம்..!
இலங்கை அரச தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கும் சீன மக்கள் குடியரசின் சோங்கிங் ஒளிபரப்பு குழுவிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர புரிதலை வளர்த்து, ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஊடகத் துறையில் பயிற்சி வாய்ப்புகளைப் பரிமாறிக் கொள்ளும் நோக்கில் இந்த ஒப்பந்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அமைச்சரவை அங்கீகாரம்
இதன் காரணமாகவே, இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கும் சோங் விங் ஒளிபரப்பு குழுமத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான நிகழ்ச்சிப் பரிமாற்றம், கற்றல் மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துதல், கூட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு மற்றும் சுற்றுலாத் துறைக்கான விளம்பரங்களை அணுகுவதற்கான வாய்ப்புகளை வழங்கும்.
எனவே, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
