சீனாவின் சுத்திகரிப்பு நிலைய முதலீட்டில் 800 மில்லியன் டொலர் குறைப்பு: வெளிவராத இருதரப்புக் காரணங்கள்
சீனாவின்(China) சினோபெக் நிறுவனம் 4.5 பில்லியன் டொலர் மதிப்பிலான சுத்திகரிப்பு நிலையத்தை கட்டுவதற்கான முன்மொழிவை முன்னர் அறிவித்திருந்த நிலையில், தற்போது 3.7 பில்லியன் டொலர்கள் மாத்திரமே உறுதியளிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன.
சீனாவின் இந்த 4.5 பில்லியன் டொலர்கள் திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்ததாக முன்னாள் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவும் கூறியிருந்தார்.
சுத்திகரிப்பு நிலையம்
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் இந்த செய்தியை பிரசுரித்திருந்தது.
(COLOMBO, Nov 27 (Reuters) - Sri Lanka on Monday approved a proposal by China's Sinopec (600028.SS), opens new tab to build a $4.5 billion refinery, its energy minister said, making it the largest single investment in the island nation since a crippling economic crisis last year.)
எனினும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்(Anura Kumara Dissanayake) சீன விஜயத்தின் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்த சுத்திகரிப்பு நிலையத்துக்கான முதலீடு 3.7 பில்லியன் டொலர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சீனாவின் சுமார் 800 மில்லியன் டொலர்கள் அளவிலான இந்த நிதிக்குறைப்பு தொடர்பில் பீய்;ஜிங்கும் விளக்கமளிக்கவில்லை.
அதேநேரம் இலங்கை அரசாங்கத்திடம் இருந்தும் எந்த விளக்கமும் இதுவரை வழங்கப்படவில்லை பெரும்பாலும் இந்த வாரத்தில் அரசாங்கத்தின் பேச்சாளர் இது தொடர்பில் விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |