இஸ்ரேலுக்கு அவசர அழைப்பு விடுக்கும் சீனா.. வளைகுடாவில் பதற்றத்தை தணிக்க முயற்சி
சீனாவின் வெளியுறவு அமைச்சர், இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசி உரையாடலின் போது ஈரான் மீதான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி, இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிடியன் சார் உடன் தொலைபேசி உரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
தொலைபேசி உரையாடல்
இதன்போது, சீன வெளியுறவு அமைச்சர் சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் உரையாடல் மற்றும் ஆலோசனை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்ற சீனாவின் நிலைப்பாட்டை வலியுறுத்தியதாக செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அண்மைய பேச்சுவார்த்தைகள் கணிசமான முன்னேற்றத்தை எட்டியிருந்தன. அவை இஸ்ரேலின் பாதுகாப்பு கவலைகளையும் கருத்தில் கொண்டிருந்தன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, இந்த செயல்முறை தற்போது இராணுவ தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri