இலங்கையின் தடுப்பூசி ஏற்றுகையின் வெற்றியின் பின்னணியில் சீனா
இலங்கையின் தடுப்பூசி ஏற்றுகை வெற்றியின் பின்னணியில் சீனா இருக்கின்றது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஸெண்ஹோங்குடன் சீனத் தூதரகத்தில் நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கோவிட் தடுப்பூசி ஏற்றுகையின் வெற்றிக்கு சீன அரசாங்கம் காத்திரமான ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சீனா வழங்கி வரும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள இவ்வாறான நடவடிக்கைகள் வழியமைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கோவிட் தொற்று கட்டுப்படுத்துகையில் இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கப்படும் என சீனா அறிவித்துள்ளது.



