தாய்வான் வான் பாதுகாப்பு வலயத்துக்குள் ஒரே நாளில் 18 குண்டுவீச்சு விமானங்களை அனுப்பியது சீனா
அணுவாயுதங்களை சுமந்துசெல்லக்கூடிய 18 குண்டுவீச்சு விமானங்களை தாய்வான் வான் பாதுகாப்பு வலயத்துக்குள் சீனா இன்று அனுப்பியதாக தாய்வான் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் தாய்வானின் தென்மேற்கு வான் பாதுகாப்பு வலயத்துக்குள் 21 விமானங்கள் வந்ததாகவும் அவற்றில், அணுவாயுதங்களை சுமந்துசெல்லக்கூடிய 18 எச்-6 குண்டுவீச்சு விமானங்களும் அடங்கும் எனவும் தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தாய்வான் வான் பாதுகாப்பு வலயத்துக்குள் ஒரே நாளில் நுழைந்த அதிக எண்ணிக்கையான எச்-6 விமானங்களின் எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன் 2021 அக்டோபரில் 16 விமானங்கள் நுழைழந்திருந்தன.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,