மிளகாய் தூள் தாக்குதல்! சிறுவர்கள் ஐவர் வைத்தியசாலையில்
திருகோணமலை - ரொட்டவெவ, மிரிஸ்வெவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் முறுகல்
கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கை கலப்புடன் தொடர்புடைய குறித்த இரு குழுக்களுக்கிடையே தொடர்ந்தும் முறுகல் நீடித்து வந்துள்ளது.
இந்நிலையில் கடைக்குச் சென்ற சிறுவனை தாக்கியுள்ளதுடன், மிளகாய் தூள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதனால் 3 சிறுவர்கள் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை மற்றைய குழுவில் உள்ள 2 சிறுவர்களும் தாம் தாக்கப்பட்டதாக தெரிவித்து நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலதிக சிகிச்சை
அத்துடன் குறித்த 5 சிறுவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த சிறுவர்கள் அனைவரும் 16 வயதிற்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan