சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த வட கொரியா
தென்கொரிய தொலைக்காட்சி தொடர்களைப் பார்த்த வட கொரியா சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த 2022ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ள நிலையில் இதனை தற்போது பிரபல சர்வதேச ஊடகம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
பிரத்தியேக சட்டம்
வட கொரியா பல ஆண்டுகளாகவே தென் கொரியாவுடன் எவ்விதத்தில் தொடர்புகளை ஏற்படுத்தினாலும் தனது மக்களை தண்டிக்கும் போக்கைக் கொண்டுள்ளது.
இதற்கென கடந்த 2020 ஆம் ஆண்டு பிரத்தியேகமான சட்டத்தையும் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், தென் கொரிய பொழுதுபோக்கு அம்சங்களை இரசிப்பதை தடை செய்யும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையிலேயே குறித்த சிறுவர்களுக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தென் கொரிய நாடகங்களைப் பார்ப்பதற்காக, வடகொரியாவில் சிலர் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ளவும் தயாராக உள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |