மலையக சிறுவர்களின் உரிமைகளை வலியுறுத்தி ஹட்டனில் சிறுவர் ஊர்வலம்
மலையக சிறுவர்களின் உரிமைகளை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்ற சிறப்பு ஊர்வலமொன்று இடம்பெற்றுள்ளதுடன், அதில் சில கோரிக்கைளும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்னை இன்று(04.10.2026) ஹட்டன் நகரில் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, மலையக சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதுடன், அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இந்த ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பதாதைகளுடன் ஊர்வலம்
ஹட்டன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஊர்வலம், ஹட்டன் சனசமூக நிலையத்திலிருந்து ஆரம்பமாகி, ஹட்டன் நகரின் முக்கிய வீதிகள் ஊடாக சென்று ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் ஆலய மண்டபத்தை சென்றடைந்தது.

ஊர்வலத்தில் பங்கேற்ற சிறுவர்கள் 'சிறுவர்களின் உரிமையை உறுதி செய்' 'எங்களை ஒதுக்காதே', 'சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாதே' உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிச் சென்றனர்.
இதன்போது மலையக மக்களின் பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், பாரம்பரிய இசைக்கருவிகளும் இசைக்கப்பட்டன.
மாணவர்களின் உரிமைக்களுக்கான குரல்
ஊர்வலத்தைத் தொடர்ந்து, மாணிக்கப்பிள்ளையார் ஆலய மண்டபத்தில் சிறுவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் கலை, கலாசார மற்றும் சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதன்போது பங்கேற்ற சிறுவர்களுக்கு புத்தகப் பைகள், எழுதுபொருட்கள் உள்ளிட்ட பெறுமதியான பரிசில்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன், சிறுவர்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் ஹட்டன் - டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்ன, ஹட்டன் கல்வி வலயத்தின் நிர்வாகப் பணிப்பாளர் சுமதி, சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் குமாரி உள்ளிட்ட பலர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
மலையக சிறுவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும், அவர்களுக்கான பாதுகாப்பான மற்றும் சமத்துவமான எதிர்காலத்தை உறுதி செய்வது அனைவரினதும் பொறுப்பு என்பதையும் வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri