ஆர்ப்பாட்டத்தின் போது சிறுவர்களுக்கு எதிரான வன்முறை:கண்டிக்கும் யுனிசெஃப்
எதிர்ப்பு போராட்டத்தின் போது சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை யுனிசெஃப் நிறுவனம் கண்டித்துள்ளது. எதிர்ப்பு போராட்டத்தில் சம்பந்தப்பட்ட சிறுவர்களுக்கு எதிரான வன்முறை நடந்துள்ளமை தொடர்பாக கிடைத்துள்ள செய்திகள் குறித்து யுனிசெஃப் கவனம் செலுத்தியுள்ளது.
சிறுவர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் அமைதியாக ஒன்றுக்கூடல் மற்றும் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும். சிறுவர் உரிமைகள் தொடர்பான இணக்கப்பாடுகளுக்கு அமைய சிறுவர்கள் மற்றும் பருவ வயதினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களில் கலந்துக்கொள்ளவும் அவர்களின் கருத்துக்களை முன்வைக்கவும் உரிமையுள்ளது.
சிறுவர்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், உள்ளூர் சமூகத்திற்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் உள்ளன.
அனைத்து வன்முறைகளும் நிறுத்தப்பட வேண்டும். அனைத்து மூத்தவர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதுடன் எதிர்ப்பு போராட்டங்கள் உட்பட சகல விதமான வன்முறைகளில் சிறுவர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும்.
சிறுவர்களுக்கு எதிராக அதிகாரத்தை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
சிறுவர்களின் பாதுகாப்புக்காக அடிப்படை உத்தரவாதங்கள் அனைத்து இடங்களிலும் சகல நேரங்களிலும் பொருந்தும் என்பதை உறுதிப்படுத்துமாறு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களிடம் கோருகிறோம் என யுனிசெஃப் அமைப்பு கூறியுள்ளது.
நாடாளுமன்றத்திற்கு எதிரில் உள்ள வீதியில் நேற்று நடைபெற்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகைக் குண்டு தாக்குதலில் போராட்டம் நடைபெற்றத்திற்கு அப்பால் தொலைவில் இருந்த சிறுவர்கள் உட்பட பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
