நாமல் - ஆனந்த விஜேபால இடையே கடும் கருத்து மோதல்
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்று வரும் அமர்வில் நாமல் ராஜபக்ச மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
போதைப்பொருள் கொல்களனை மறைத்து வைத்திருந்த சம்பத் மனம்பேரி மொட்டுக் கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் அமைச்சர் ஜேன்ஸ்டன் பெர்ணான்டோவின் இணைப்புச் செயலாளர் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
மனம்பேரி விவகாரம்
இதையடுத்து அவருக்கும் நாமல் ராஜபக்சவுக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் நாமல் ராஜபக்ச உரையாற்றிய போது போதைப்பொருள் கொள்கலன் அரசாங்கத்தின் காலத்திலேயே கொண்டுவரப்பட்டதாகவும் அதை மறைத்து கொள்வதற்காக அதன் பழியை எமது பக்கம் சாற்றுவதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், கொள்கலன் தொடர்பில் கிடைத்த புலனாய்வு தகவலை அரசாங்கம் மறைத்துள்ளதாகவும் நாமல் தெரிவித்தார்.
அவர் உரையாற்றிய பின்னர் பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்த அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்த கருத்தையடுத்தே வாக்குவாதம் முற்றிய நிலையில் குழப்பம் ஏற்பட்டது.



