கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்களின் மோசமான செயல்.. கடுமையாக எச்சரித்த பொலிஸார்
உலக குழந்தைகள் தினத்தை கொண்டாடுவதற்காக அம்பலாங்கொட பகுதியில் உள்ள பாடசாலையின் நான்கு மாணவர்கள், பாடசாலைக்கு மது போத்தல்களை கொண்டு வந்ததற்காக மீட்டியாகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டு காவலில் எடுக்கப்பட்ட நான்கு மாணவர்களும் இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சை எழுதவிருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் (1) மதியம் அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை வழங்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மதுபான போத்தல்கள்..
அதன் பின்னர், பெற்றோரின் சம்மதத்துடன் நால்வரும் பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலக குழந்தைகள் தினத்தன்று (1) மதியம் நான்கு மாணவர்களும் பாடசாலைக்கு மது கொண்டு வந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பாடசாலையில் இருந்து பொலிஸாருக்கு மது கொண்டு வந்ததாக கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து, அவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, ஹிக்கடுவவில் உள்ள ஒரு மதுபானக் கடையில் இருந்து மது வாங்கி தண்ணீர் போத்தலில் கொண்டு வந்ததாக தெரியவந்தது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



