விஜயை நோக்கி செருப்பை வீசிய மர்ம நபர் யார்.. வெளியானது காணொளி!
தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் பேரணியில் அக்கட்சியின் தலைவர் விஜய் மீது மர்ம நபர் ஒருவரால் பாதணி எறியப்பட்டது.
இந்நிலையில், பேரணியின் போது நபர் ஒருவர் பாதணிகளை எறியும் காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
கரூரில் இடம்பெற்ற தவெகவின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 41பேர் உயிரிழந்தனர்.
கரூர் பேரணி
குறித்த சம்பவம் தமிழ் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில் தவெக தலைவர் விஜய் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அதேநேரம், தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில் இருந்து இச்சம்பவம் ஒரு திட்டமிட்ட சதி என தெரிவிக்கப்பட்டது.
த.வெ.க பிரச்சாரத்தில் விஜய்யை நோக்கி செருப்பு வீசியது யார்? - வெளியான வீடியோ#Karur | #Vijay | #ViralVideo | #KarurIssue | #PolimerNews pic.twitter.com/cKg8dbc3mO
— Polimer News (@polimernews) October 2, 2025
அத்துடன், இந்த பேரணியில் நடந்த மரணங்கள் மற்றும் இரவோடு இரவாக மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தவெக சிபிசிஐடி விசாரணையும் கோரியிருந்தது.
விசாரணைகள் ஆரம்பம்..
மேலும், விஜயின் பேரணியில் இரு பக்கங்களில் இருந்த மர்ம நபர்களால் பாதணிகள் எறியப்பட்டமையானது நிச்சயமாக விஜயின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே தற்போது, பாதணிகளை எறிந்த குறித்த நபரின் செயல் பதிவான காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
அதற்கமைய, அச்செயலில் ஈடுபட்ட நபர் யார் என கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



