அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஊடக நிறுவனங்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
மாகாண மற்றும் பிராந்திய மட்டத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கான கொடுப்பனவுகளை உரிய நேரத்தில் வழங்குமாறு அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஊடக நிறுவனங்களின் தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச். எஸ். கே. ஜே. பண்டார இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
பிரச்சினைக்குத் தீர்வு
அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "அரச தகவல் திணைக்களத்தினால் நாட்டின் பல மாவட்டங்களில் நடாத்தப்பட்ட செயலமர்வுகளின் போது, பிராந்திய செய்தியாளர்கள் தமது செய்திகளுக்கான கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் ஏற்படுவதாக தொடர்ச்சியாகக் கவலை வெளியிட்டனர்.
எனவே, இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்துமாறும், பிராந்திய செய்தியாளர்களுக்கு நியாயமானதும் காலத்தே வழங்கப்படுவதுமான கொடுப்பனவை உறுதிசெய்வதன் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண தங்களின் ஆதரவை வழங்குமாறும் ஊடக நிறுவனங்களைக் கேட்டுக்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



