அதிகளவில் மனநலப் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள சிறுவர்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்
தற்போது 13 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அதிகளவில் மனநலப் பாதிப்புகளுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் போக்கு அதிகரித்துள்ளதாக தேசிய மனநல நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் சேனானி விஜேதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
கொவிட் காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டதால், கல்வி நடவடிக்கைகள் இணையவழியில் (Online) நடைபெற்றன.
சிகிச்சைகளுக்காக அனுமதி
இது சிறுவர்கள் கையில் கைத்தொலைபேசிகள் தங்குதடையின்றி கிடைக்க வழிவகுத்தது.

கல்வியின் தேவைக்காகத் தொடங்கிய இந்தப் பழக்கம், தற்போது அடிமைத்தனமாக மாறியுள்ளது.
இதனால் பல சிறுவர்கள் மனரீதியாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
சமூகப் பிரச்சினை
கைத்தொலைபேசி மட்டுமன்றி, போதைப்பொருட்களுக்கு அடிமையாவதாலும் பதின்ம வயது சிறுவர்கள் பாரிய மனநலச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

"சமூக ரீதியான இடைவெளிகள் காரணமாக உருவான இந்த கைத்தொலைபேசி பழக்கம், இன்று ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
13 - 18 வயது வரையான பிள்ளைகளே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என விசேட வைத்திய நிபுணர் சேனானி விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
சி.வீ.கே .சிவஞானம்- சுமந்திரன் தமிழரசுக்கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள்! மறவன்புலவு சச்சிதானத்தன் காட்டம்