கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு கிண்ணியாவில் பிரசவம்
திருகோணமலை - கிண்ணியா தள வைத்தியசாலையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு மனிதாபிமான முறையில் பிரசவம் செய்த சம்பவமொன்று கிண்ணியா தள வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது.
கிண்ணியா பிரதேசத்தில் 27 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணொருவர் பிரசவ வலி காரணமாக இன்று (12) கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு உடனடியாக அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் அப்பெண்னுக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், கிண்ணியா வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ .எம்.எம்.ஜிப்ரி அவர்களின் வழிகாட்டலுடன் மகப்பேற்று விஷேட வைத்திய நிபுணர் டொக்டர் புன்சிரி குணதிலக்கவினால் பிரசவம் மேற்கொள்ளப்பட்டது.
கோவிட் தொற்றுடன் கர்ப்பிணி பெண் ஒருவர் கிண்ணியா தள வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட முதல் தடவை எனவும்,கோிவட் ஆபத்திலும் மனிதாபிமான முறையில் செயற்பட்ட தாதிய உத்தியோகத்தர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்திய குழுவினருக்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் பொதுமக்களும், உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கோவிட் தொற்றுக்குள்ளான தாய் நலத்துடன் இருப்பதாகவும், குழந்தைக்கு ஓரிரு நாட்களில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும்
கிண்ணியா தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் குறிப்பிட்டார்.
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam