முல்லைத்தீவில் பலரையும் சோகத்தில் ஆழ்த்திய சிறுவனின் மரணம்
முல்லைத்தீவு-கேப்பாபிலவு பகுதியில் வீட்டின் இருப்பு படலை வீழ்ந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று (14.06.2023) இடம்பெற்றுள்ளது.
கேப்பாபிலவு பகுதியினை சேர்ந்த மூன்று அகவை நிரம்பில ஆதவன் லிதுசிகன் என்ற சிறுவன் வீட்டு கேற்றில் விளையாடிக்கொண்டிருந்த வேளை கேற் (இரும்பு படலை) சிறுவன் மீது வீழ்ந்து சிறுவன் உயிரிழந்துள்ளான்.
பிரேத பரிசோதனை

உயிரிழந்த சிறுவனின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறுவனின் உயிரிழப்பு கேப்பாபிலவு கிராமத்தில் பெரும்சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது சரியான அக்கறை கொண்டு செயற்பட வேண்டும். தற்போது வடக்கு மாவட்டங்களில் அதிகளவில் சிறுவர்கள் உயிரிழப்பு சம்பவம் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri