நீர்த் தொட்டியில் வீழ்ந்து 3 வயது குழந்தை பரிதாப மரணம்
மூன்று வயதுடைய குழந்தையொன்று வீட்டின் நீர்த் தொட்டியில் வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.
ஹம்பாந்தோட்டை மீத்தெனிய கிழக்கு பகுதியைச் சேர்ந்த குழந்தையே நேற்று (07.07.2024) இவ்வாறு உயிரிழந்துள்ளது என்று மீத்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் தாய் தனது 9 வயது குழந்தையையும், உயிரிழந்த மூன்று வயது குழந்தையையும் குளிப்பாட்டுவதற்காக வீட்டுக்கு வெளியே உள்ள நீர்த் தொட்டி இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
அதனையடுத்து, அவரது ஒன்பது வயது குழந்தையை குளிப்பாட்டி வீட்டினுள்ளே அழைத்துச் சென்ற தாய், மூன்று வயது குழந்தையை நீர்த் தொட்டிக்கு அருகில் விட்டுச் சென்றுள்ளார்.
மீண்டும் வீட்டிலிருந்து வெளியே வந்த தாய், மூன்று வயது குழந்தையைத் தேடியபோது குழந்தை நீர்த் தொட்டிக்குள் வீழ்ந்து கிடப்பதை அவதானித்துள்ளார்.
பின்னர் குழந்தை மீட்கப்பட்டு மீத்தெனிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது என்று வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam
