இணையத்தில் சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு
இலங்கையில் இணைய வழியில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் 50 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2024 முதல் இதுவரை இணையத்தின் மூலம் 18 வயதுக்குக் குறைவான 43 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ்மா அதிபர் உதய குமார வுட்லர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு 50வீத அதிகரிப்பு
2024ஆம் ஆண்டு 18 வயதுக்குக் குறைவான 15 சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2025ஆம் ஆண்டு இதுவரை 28 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம் கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு 50வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2024ஆம் ஆண்டு போதைப்பொருள் தொடர்பாக 282 சிறுவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், 2025ஆம் ஆண்டு இதுவரை 206 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு
2024ஆம் ஆண்டு 375 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, அதனுடன் தொடர்புடைய 114 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு இதுவரை 118 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
சிறுவர்களுடன் தொடர்புடைய ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு நேரடியாக தெரிவிக்கலாம் அல்லது 119, 118 போன்ற எண்கள், 109-1997 அவசர அழைப்பு எண் அல்லது புதிய பொலிஸ் மா அதிபரின் 0718598888 என்ற எண்ணிற்கு புகைப்படம் அல்லது வீடியோவுடன் முறைப்பாடு செய்ய முடியும் என அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 15 மணி நேரம் முன்

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இன்று முக்கிய அறிவிப்பு News Lankasri

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
