வடக்கில் 5 ஆண்டுகளில் 742 சிறுவர் துஷ்பிரயோகம்! - சிறுவர் நன்னடத்தை திணைக்களம் தகவல்
வடக்கு மாகாணத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 742 சிறுவர்கள் பாலியல் ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் இளவயது கர்ப்பம் காரணமாக 49 சிறுமிகள் பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான துஷ்பிரயோக சம்பவங்கள் ஒவ்வொரு ஆண்டும் பதிவாகியுள்ளன.
2018ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக 105பேரும், உடலியல் ரீதியாக 91 பேரும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
2019ஆம் ஆண்டு 106 பேர் பாலியல் ரீதியாகவும், 65 பேர் உடலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

2020ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக 118 பேரும், உடலியல் ரீதியாக 52 பேரும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு பாலியல் ரீதியாக 123 பேரும், உடலியல் ரீதியாக 15 பேரும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் வரையில் பாலியல் ரீதியாக 59 பேரும், உடலியல் ரீதியாக 8 பேரும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 15 மணி நேரம் முன்
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam