தந்தையின் கொடுமை தாங்க முடியாமல் 35 கிலோ மீற்றர் தூரம் சென்ற சிறுவன்
திம்புலாகல பிம்பொகுன கிராமத்தைச் சேர்ந்த 12 வயதுடைய பாடசாலை செல்லும் மாணவன் ஒருவர் சைக்கிளில் சுமார் 35 கிலோமீற்றர் தூரம் பயணித்துள்ளார்.
கடந்த 08ஆம் திகதி தந்தையின் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் சென்ற சிறுவன் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிப்படப்டுள்ளது.
அதற்கமைய, சிறுவனை தேடி சென்ற பொலிஸார் பெற்றோருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்ததன் பின்னர் மகனை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தந்தை அடித்து துன்புறுத்துவதகால் பூனானியில் வசிக்கும் தாயை தேடிச் சென்றதாக சிறுவன் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாமல்கம பிரதேசத்திலுள்ள கால்நடை கண்காணிப்பாளர் ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறுவனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
பட்டினியால் வாடிய சிறுவனுக்கு உணவு மற்றும் பானத்தை வழங்கியதை அடுத்து, தந்தை மற்றும் சித்தியை அழைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வெலிகந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போன திம்புலாகல, பிம்போகுன, கிராமத்தைச் சேர்ந்த குறித்த 12 வயது சிறுவனை தேடுவதற்காக 50 பொலிஸ் அதிகாரிகள் கொண்ட குழுவொன்று தயார்படுத்தப்பட்டிருந்ததாக அரலகங்வில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
