யாழில் அதிகரித்துவரும் சிறுவர் வன்கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டும்: மாவட்டச் செயலாளர்

Jaffna Child Abuse Northern Province of Sri Lanka
By Theepan Jun 02, 2023 01:29 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் சிறுவர் வன்கொடுமை அதிகரித்து வருவதுடன், இது எதிர்காலத்தையும் பாதிக்கக் கூடிய பிரச்சினை ஆகவே இதனைத் தடுக்க வேண்டியது எமது கடமை என யாழ். மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

வலிகாம மேற்கின் சங்கானையில் சிறுவர் வன்கொடுமையைத் தடுத்தல் என்ற தொணிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனியும் இன்றைய தினம் (02.06.2023) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அ.சிவபாலசுந்தரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் உரையாற்றுகையில், கடந்த 4 மாதங்களுக்கு மேலாக இந்த மாவட்டத்திலே நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற அபிவிருத்தி சார் நடவடிக்கைகள், சமூகம் சார் பிரச்சினைகள் சம்பந்தமாகத் தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொண்ட படியே இருக்கின்றேன்.

யாழில் அதிகரித்துவரும் சிறுவர் வன்கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டும்: மாவட்டச் செயலாளர் | Child Abuse In Jaffna

கல்வி நிலை குறித்து வெட்கமாக உள்ளது

இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பல கலந்துரையாடல்களையும் சமூகப் பிரச்சினைகளைத் தடுப்பதற்கான தந்திரோபாய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கின்றோம்.

எங்களுடைய மாவட்டத்தில் சிறுவர் வன்கொடுமை என்பது அதிகரித்ததொன்றாகவும் எதிர்காலத்தையும் பாதிக்கக் கூடிய பிரச்சினையாகவும் காணப்படும் அதேவேளை அதனை அலட்சியப்படுத்திக்கொண்டு இருக்கின்றோம். 

யாழ். மாவட்டத்தின் தற்போதைய கல்வி நிலை குறித்து வெட்கமாக உள்ளது. கல்வியில் முதலிடத்திலிருந்த மாவட்டம் தற்போது இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன?

யாழில் அதிகரித்துவரும் சிறுவர் வன்கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டும்: மாவட்டச் செயலாளர் | Child Abuse In Jaffna

 அக்கறை எடுக்க வேண்டும்

மேலும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி அதிகரித்துவிட்டது. பிள்ளை தனது பிரச்சினைகள் குறித்துப் பெற்றோரிடம் உரையாடுவதற்கான சந்தர்ப்பங்களும் வழங்கப்படுவதில்லை.

இதனாலேயே பிள்ளைகள் தவறான வழிநடத்தலின் கீழ் சென்று இவ்வாறு தவறான வழியில் பயணிக்கின்றனர். இது குறித்துப் பெற்றோர்கள் அதீத கவனம் எடுக்க வேண்டும். மேலும் ஆசிரியர்களும் மாணவர்களின் நலத்தில் அக்கறை எடுக்க வேண்டும். 

எமது மாவட்டத்தில் சிறுவர் வன்கொடுமை மாத்திரமின்றி சட்ட விரோத போதைப் பொருள் பாவனைச் சார்ந்த முறைப்பாடுகளும் நீதிமன்ற வழக்குகளில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

யாழில் அதிகரித்துவரும் சிறுவர் வன்கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டும்: மாவட்டச் செயலாளர் | Child Abuse In Jaffna

இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸார் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அனைவரும் இது குறித்த விடயங்களில் அவதானமாகச் செயற்படுங்கள்.

ஆலயங்கள் பரீட்சை காலங்களிலும் அதிகளவு சத்தத்துடன் ஒலிபெருக்கிகளைப் போட்டு மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. இவை தடுக்கப்பட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US