பாலியல் வன்புணர்வு சம்பவங்கள்! இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
நாட்டில் பதிவாகியுள்ள சிறுவர் வன்புணர்வு சம்பவங்களில், பாதியளவான சம்பங்கள், போதைப்பொருள் பாவனையாளர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
செப்டெம்பரில் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மீதான 168 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவர்களில் 22 பேர் கர்ப்பமடைந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ன முன்னதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
முறையான தந்தைமார் இல்லாத குழந்தைகள்
அவர்களில் பதினைந்து பேர் அதே வயதுடையவர்களுடன் உடலுறவு கொண்டதால் கர்ப்பமாகியுள்ளனர் என்றும் ஏழு பேர் பலாத்காரம் காரணமாக கர்ப்பமாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், முறையான தந்தைமார் இல்லாத 22 குழந்தைகள் இந்த உலகத்திற்கு வாழ்வதில் பாரிய சிக்கல் நிலை உள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் போதைக்கு அடிமையானவர்களால் மேற்கொள்ளப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் குடும்ப வன்முறை ஆகியவற்றிற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.