ஒரு மாத காலத்தில் 168 சிறுவர் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள்: எரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டு
இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு 168 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
11,000 சிறுவர் வன்புணர்வு சம்பவங்கள்
பாலியல் வன்புணர்வுகளுக்கு உள்ளானவர்களில் 22 பேர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 11,000 சிறுவர் வன்புணர்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
2022 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ள சிறுவர் வன்புணர்வு சம்பவங்களில் குறைந்தது 41வீதமானவை பாலியல் வன்புணர்வின் கீழ் வருகின்றன, என்றும் எரான் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan
