கிண்ணியாவில் கோழி இறைச்சி கடைகள் சுற்றிவளைப்பு
திருகோணமலை- கிண்ணியாவில் சில கோழி இறைச்சி கடைகள் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் சுற்றிவளைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையானது இன்று(1) மாவட்ட கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.எம். அஜித் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது நுகர்வோர்க்கு பொருத்தமற்ற முறையில் வைத்திருந்த கோழி இறைச்சிகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.
பரிசோதனை
மேலும் கடை உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதுடன் கோழி இறைச்சி கடைகளில் குளிர்சாதனப் பெட்டியின் குளிர் நிலைமையும் பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும், எதிர்வரும் நாட்களில் ஏனைய இறைச்சி கடைகளும் பரிசோதிக்கப்படும் என கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.அஜித் மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
