கோழி இறைச்சி விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
இரண்டு மாதத்திற்குள் கோழி இறைச்சி விலையில் மாற்றம் செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (04.10.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே வர்த்தக அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வரிச்சலுகை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு கிலோ கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு வழங்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கால்நடை தீவனத்திற்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களும் மக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தேவைப்பட்டால் தொடர்ந்தும் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
    
    
    
    
    
    
    
    
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    Bigg Boss 9: தெறிக்க விட்ட திவ்யாவையே வாயடைக்க வைத்த திவாகர்... எதிர்பாராத பிக் பாஸ் ப்ரொமோ Manithan