மாவோ அமைப்பினரை இலக்கு வைத்த இந்திய இராணுவம்: 18 பேர் பலி
இந்தியாவின் - சத்தீஸ்கரின்(Chhattisgarh) காங்கர் மாவட்டத்தில் மாவோ அமைப்பினருக்கும், இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 18பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், மூன்று இந்திய பாதுகாப்புப் படையினரும் காயமடைந்ததாக இந்திய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 19 ஆம் திகதி இந்திய மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்டத்தில் 60,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கூட்டு நடவடிக்கை
இந்தநிலையில் குறிப்பிட்ட உளவுத்துறை தகவல் அடிப்படையில், கூட்டு நடவடிக்கை ஏப்ரல் 16 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது மாவோ அமைப்பினர் இந்திய படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். இதனையடுத்தே பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய இராணுவத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |