வவுனியா வைத்தியசாலை பாதுகாவலர்கள் மீது தாக்குதல்
வவுனியா பொது வைத்தியசாலையின் பாதுகாவலர்கள் மீது இளைஞர்கள் குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று முன்தினம் (15.04.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
வவுனியா பொது வைத்தியசாலையில் நோயாளி ஒருவரை பார்வையிடுவதற்காக நேற்றிரவு 11 மணியளவில் இளைஞர்கள் குழு ஒன்று வருகை தந்துள்ளது.
இதன்போது கடமையில் இருந்த பாதுகாவலர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.
சம்பவத்தில்தாக்குதலுக்கு இலக்கான பாதுகாவலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தாக்குதலை மேற்கொண்டவர்கள் தப்பிச்சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
